Print this page

வவுனியாவில் 1500 நாட்களாக தொடரும் காணாமல் போன உறவுகளின் போராட்டம்

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 1500 நாட்களை எட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு  இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று  முன்னெடுக்கப்பட்டது. 

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று பின்பு அங்கிருந்து பேரணியாக மணிக்கூட்டு சந்தியூடாக   சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் கொட்டகையை வந்தடைந்தனர். 

இதன் போது எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே? போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு சமூக இடைவெளிகளை பேணி இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடையதும் பிரித்தானியாவின் உடையதும் கொடிகளையும் ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.