Print this page

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது

சுமார் 22 கோடி ரூபாய் பெறுமதியான 17 கிலோ கிராம் தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (03) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொண்டு செல்ல முயற்சித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் நிறுவனத்தின் சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளினால் இது தொடர்பில் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.