Print this page

307 பேருக்கு நாளை இழப்பீடு

படைப்புழுக்களின் தாக்கதினால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான முதல் கட்ட இழப்பீடு வழங்கும் நாளை ஆரம்பமாகவுள்ளன.

இழப்பீடு வழங்கும் பணிகள், அம்பாறை மாவடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

பாதிப்புக்குள்ளான 307 பேருக்கு இவ்வாறு நாளைய தினம் இழப்பீடு வழங்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

குறித்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவுள்ளது.