Print this page

பாக்கு நீரிணையை கடக்கும் முயற்சியில் இலங்கை விமானப்படை வீரர்

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்  ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை இன்று (10)   சனிக்கிழமை அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருடங்கள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்  ரோசன் அபேசுந்தர நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து  பாக்கு நீரிணையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். 

குறித்த விமானப்படை வீரர் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் பாக்கு நீரினை ஊடாக தனுஸ் கோடியை சென்றடைவார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் தலைமன்னார் நோக்கி வருகை தர உள்ளார்.

குறித்த வீரர் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மீண்டும் தலைமன்னாரை வந்தடைவார் என தெரிவிக்கப்படுகின்றது.