Print this page

ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வழங்கப்படும்

எதிர்வரும் சிங்கள - தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசினால் வழங்கப்படவுள்ள 5,000 ரூபா கொடுப்பனவு, எதிர்வரும் 12 மற்றும்13 ஆம் திகதிகளில் சமுர்த்தி வங்கிகளூடாக வழங்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால், இந்த இரு நாட்களிலும் அனைத்து வர்த்தக நிலையங்களை திறக்குமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.