Print this page

கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள இந்திய போர்க் கப்பல்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான “INS RANVIJAY” கப்பல், மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு சித்திரைப் புத்தாண்டு தினமாகிய நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைத்தது.

சுமார் 146.2 மீட்டர் நீளங்கொண்ட இந்தக் கப்பல் Destroyer  வகையிலான போர்க் கப்பலைச் சார்ந்ததாகும்.

கப்பலின் கட்டளைத் தளபதி கப்டன் என் ஹரிகரன் இன்று வியாழக்கிழமை மேற்கு கடற்படை நிறைவேற்று கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷனவை இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது கோவிட்19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியைத் தொடர்வதற்கான சீருடை அடங்கிய பொதியை இந்திய கடற்படை அதிகாரி கையளித்ததோடு அதன் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

“INS RANVIJAY”  என்கிற இந்திய கப்பலின் கட்டளைத் தளபதியினால் கொழும்பு - பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுச் சின்னத்திற்கு மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.