Print this page

கிளிநொச்சி பள்ளிக்குடா பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சி மாவட்டம் பூநகரிபொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடா பகுதியில் இராணுவத்தினருக்குகிடைத்த இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினரும் கிளிநொச்சி பொலிஸ் விசேடஅதிரடிப் படையினரும் இணைந்து இன்று(20) அதிகாலை 03 மணியளவில்  தேடுதலை மேற்கொண்டபோது பள்ளிக்குடா கடற்கரையை அண்மித்த காட்டுப் பகுதியில்  185.575 கிலோகிராம்  கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பள்ளிக்குடா பகுதியில் மீட்கப்பட்ட கஞ்சா தொடர்பாக யாரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லையென பொலிஸ் விசேடஅதிரடிப் படையினர் தெரிவித்துள்ளார்கள்

பள்ளிக்குடா பகுதியில் மீட்கப்பட்ட கஞ்சா  பூநகரி பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திடம் அதனை ஒப்படைத்துள்ளதுடன் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றார்கள்.