Print this page

‘மொட்டு’ கட்சியை சேர்ந்தவரே வேட்பாளர்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரே தமது தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுவார் என்று, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமது தரப்பில் போட்டியில் நிறுத்தப்படும் ஜனாதிபதழ வேட்பாளர், நிச்சயமாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் தான் போட்டியிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Last modified on Tuesday, 12 March 2019 06:20