Print this page

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதிகோரி மாபெரும் பேரணி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நேற்றுடன் நிறைவடைவதையிட்டு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியிலிருந்து அருட் தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நேற்று மாலை ந;பெற்றது. இந்த பேரணி பால்தி சந்தி வழியாக சென்று கட்டுவபிட்டிய வீதி வழியாக கட்டுவபிட்டிய தேவாலயத்திற்கு சென்றது.

இந்த பேரணியில் கொழும்பு  பேராயர் மெல்கம் ரஞ்சித் கலந்து கொண்டார்.

குண்டு தாக்குதல் இடம்பெற்ற மூன்று தேவாலயங்களிலும் மற்றும் ஹோட்டல்களிலும் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை பதாகைகளில் ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் சென்றனர்.