Print this page

இரு வாரங்களுக்கு அனைத்து அரச தனியார் விழாக்களையும் நிறுத்த தீர்மானம்

இன்று (25) முதல் எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேபோன்று எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த தனியார்துறையின் அனைத்து விழாக்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களின் கீழ் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.