Print this page

யாழில் ஏற்பட்ட விபத்தில் 15 இராணுவத்தினர் காயமடைந்தனர்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இராணுவத்தினர் 15 பேர் வரையில் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது காயமடைந்த இராணுவத்தினர் 15 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் 24ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.