Print this page

குளத்தில் வலையில் சிக்கிய யானைக்குட்டி மீட்பு

குருநாகல் மாவட்டம் கிரிபாவ பகுதியில் குளத்தில் மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் நான்கு  மாத யானைக்குட்டியொன்று சிக்கியதை அவதானித்த அப்பகுதியியைச் சேர்ந்த ஒருவர், குறித்த யானை குட்டியை குளத்திலிருந்து உயிருடன் மீட்டு கிரிபாவ வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதிக்கு கிரிபாவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர்  சென்று மீட்கப்பட்ட யானையை நிகாவெரெட்டிய மிருக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த யானை உடவல யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.