Print this page

யாழில் பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில்  கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் பொலிஸாரினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

காங்கேசன் துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹட்டகட்சியின் வழிகாட்டலில் தெல்லிப்பளை பொலிஸ் பரிசோதகர் மேர்சன் இந்திக சில்வாவின் தலைமையில் இந்த விழிப்புணர்வு  செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வர்த்க நிலையங்களில் வர்த்தகர்கள் செயற்படும் விதம், பேருந்துகளில் பயணிப்பவர்கள் மற்றும் சந்தைகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

முகக்கவசம் அணிவது மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது முகக்கவசம் அணியாதோர் பொஸிசாரினால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.