Print this page

மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை: இராணுவ தளபதி விசேட அறிவிப்பு

திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் அனைத்து வகையான நிகழ்வுகளை நடத்த இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதியும் கொவிட் 19 ஒழிப்பு செயலணியின் தலைவருமான ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமையின்(3) பின்னர் இரு வாரங்களுக்கு எந்தவொரு திருமணம்  உள்ளிட்ட எந்தவொரு நிகழ்வையும் நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.