Print this page

கடற்பரப்பில் மிதந்து வந்த 183 கிலோ கிராம் கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 183 கிலோ கிராம் கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் நேற்று(03)  காலை மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொதிகள் கடலில் மிதந்து வந்தவேளை அதனை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் 183 கிலோ கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சா பொதிகள் காணப்பட்டுள்ளது.

தற்போதைய கொரானா அச்சம் காரணமாக நேற்று மாலை குறித்த கஞ்சா பொதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.