Print this page

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  இன்று (05) முற்பகல் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான கஞ்சன விஜேசேக்கர, கனக ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ குட்டியாரச்சி மற்றும் யூ.கே. சுமித் ஆகியோர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் ஜனாதிபதி அவர்களை வரவேற்றனர்.

பாராளுமன்ற சபா மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் அங்கிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளை செவிமடுத்தார்.

புதிய பாராளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதன் பின்னர் ஜனாதிபதி அவர்கள் சபைக்கு வருகைதந்த ஐந்தாவது சந்தர்ப்பம் இதுவாகும்.