Print this page

யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!!!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் தகவல்கள் தொிவிக்கின்றனர். இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுதுமலையை சேர்ந்த 92 வயதான ஆண் ஒருவர் கைதடி பகுதியை சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவர் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவரும் அளவெட்டி பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்திருக்கின்றது

 

Last modified on Friday, 20 August 2021 04:56