Print this page

மட்டக்களப்பு நீதிமன்றங்கள் தற்காலிக வேலை நிறுத்தம்...

இன்று முதல் எதிர்வரும் 03.09.2021 வரை மட்டக்களப்பு நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாகத் தவிர்க்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பி.பிறேம்நாத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எந்த ஒரு வழக்குகளும் நீதிமன்றத்திலே அழைக்கப்படமாட்டாது என்றும் குறிப்பாக முடக்க வழக்குகளும் அழைப்பு வழக்குகள் தாபரிப்பு வழக்குகள் உட்பட எந்தவிதமான வழக்குகளும் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட மாட்டாது.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்படுகின்ற வழக்குகள் மாத்திரமே நீதிவான் முன்னிலையில் கொண்டு செல்லப்படும். அந்த சந்தர்ப்பத்திலும் கூட சட்டத்தரணிகள் தங்களுடைய பிரசன்னத்தினை வழங்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Last modified on Friday, 20 August 2021 05:43