Print this page

முக்கியமான 4 தடுப்பூசிகளின் செயற்றிறன் தொடர்பான ஆய்வில் உறுதியாகியுள்ள விடயம்

50 வயதிற்கு குறைந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத கோவிட் தொற்றாளர்களின் மரணமானது சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களை விடவும் 3.8 மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

 அதில் மேலும், கோவிட் - 19 தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும் கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

 

Last modified on Thursday, 26 August 2021 11:54