Print this page

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண பூரண குணமடைந்துள்ளார்

கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண பூரண குணமடைந்துள்ளார்.

தான் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக சமூகவலைதளங்களில் பிரசாரம் செய்தவர்கள் தொடர்பில் மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

தொற்று ஆளாகியுள்ளதாக உணர்ந்த முதல் சந்தர்ப்பத்திலேயே சிகிச்சை பெறுவது மிக கட்டாயமானது எனவும் தெரிவித்துள்ளார். 

அதனை தான் செய்ததன் காரணமாகவே தான் இன்று நல்லாரோக்கியத்துடன் வீடு திரும்புவதாகவும், நோயை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் இரண்டு வாரங்கள் வீட்டில் ஓய்வெடுத்த பிறகு தனது பணிகளை மீண்டும் தொடங்குவதாக அவர் தெரிவித்தார்.

Last modified on Saturday, 28 August 2021 03:08