Print this page

இந்தியா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்களூருக்கு வாரத்திற்கு 4 விமானப் பயணங்களை செயற்படுத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இடையே வாராந்திர விமானங்களும் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹைதராபாத், புது டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விமானங்கள் இயக்கப்படும் என இலங்கை உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.