Print this page

மகில் பண்டாரவுக்கு பிணை

நாடாளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகில் பண்டார தெஹிதெனிய, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமைதியற்ற முறையில் செயற்பட்டதன் காரணமாக மகில் பண்டார தெஹிதெனிய, பொலிஸாரால் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மகில் பண்டார தெஹிதெனிய, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முற்பகல் முன்னிலையானார்.

இதன்போது, அவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

Last modified on Monday, 18 March 2019 06:06