Print this page

பஞ்சிகாவத்தையில் மஞ்சட்கடவையில் ஒருவர் மயங்கி விழுந்தார்

September 01, 2021
பஞ்சிகாவத்தை பகுதியில் காலை 9 மணியளவில் மஞ்சட்கடவையில் வயதான ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த எமது ஆசியன் மிரர் பத்திரிக்கையாளர் அவரை தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும் அவர் எழும்பாத படியால் ஆம்புலன்ஸ்க்கு 1990 இலக்கத்திற்கு அழைப்பெடுத்துள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அருகிலுள்ள பொலிஸ் சோதனைசாவடியிலுள்ள பொலிசாரிடம் தகவலை தெரிவித்தார். இவர் மயங்கியது எதனால் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே இந்த ஊரடங்கு காலப்பகுதிக்குள் அனைவரும் வலு அவதானத்துடன் செயற்படுங்கள். தேவையற்ற விதத்தில் வெளியே நடமாடுவதை தவிர்த்துக்கொண்டு மாஸ்க் அணிந்து உங்களையும் குடும்பத்தையும் காத்துக்கொள்ளுங்கள்.
Last modified on Wednesday, 01 September 2021 06:17