Print this page

வடக்கில் இரண்டு களஞ்சியசாலைகளுக்கு சீல்

September 02, 2021

வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் வவுனியா தாண்டிக்குளம் மற்றும் கொறவப்பொத்தானை வீதிகளில் அமைந்துள்ள இரண்டு தனியார் நெற்களஞ்சியசாலைகளிற்கு சீல் வைக்கப்பட்டது.

நாட்டில் கொரோனா தொற்று பரவலடைந்து வரும் நிலையில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டிலுள்ள தனியார் நெற்களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் அரசினால் அறிவிக்கப்பட்ட கால எல்லைக்குள் குறித்த தகவல்களை வழங்காத இரண்டு நெற்களஞ்சியசாலைகள் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் சீல் வைக்கப்பட்டது.

#வவுனியா #தாண்டிக்குளம் #கொறவப்பொத்தானை #நெல் 

Last modified on Thursday, 02 September 2021 08:24