Print this page

கொழும்பு போட் சிட்டியை தன்வசப்படுத்தும் சீன வங்கி

September 02, 2021

சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று காலை zoom ஊடாக சீன நாடாளுமன்றத்தின் சபாநாயகர் லீ ஷாங்க்சுவின் உட்பட நிலைக்குழுத் தலைவர்களுடனான சந்திப்பில் அவர் மேற்கண்ட உறுதிமொழியை அளித்தார்.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளுக்கு சீனாவின் ஆதரவையும் அவர் நாடியுள்ளார்.

#கொழும்பு #துறைமுகநகரம் #சீனா #அபிவிருத்தி #வங்கி #பசில்ராஜபக்ஷ