Print this page

மருத்துவருக்கு முன்பாக உயிரிழந்த இளைஞன்

September 03, 2021

கண்டியில் இளைஞன் ஒருவன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 கண்டி குண்டசாலை மஹமெவ்னா என்ற பிரதேசத்தில் உள்ள கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு இடுப்பு வலி காரணமாக பரிசோதனை செய்துகொள்ளச் சென்ற இளைஞன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞனுக்கு 25 வயது எனவும் கண்டி கட்டுகஸ்தோட்டையை சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.  பின்னர் நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

#கொரோனா  #மரணம் # கண்டி

Last modified on Friday, 03 September 2021 08:20