Print this page

மட்டக்களப்பு பெரிய உப்போடை வாவி கரையில் மீன்பிடி இயந்திர படகுக்கு இனந்தெரியாதோர் தீ வைத்து எரிப்பு!

September 04, 2021

இன்று அதிகாலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய உப்போடை வாவிகரை வீதியில் வாவி கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படகு ஒன்றுக்கு இனம் தெரியாத நபர்கள் தீவைத்ததில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி இயந்திர படகு, வலைகள், முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது.