Print this page

சாணக்கியனுக்கு சவால் விடுத்த அமைச்சர்

September 08, 2021

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அமைச்சரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ ஈடுபட்டுள்ளார் என்பதை சாணக்கியன் நிரூபித்துக்காட்டினால், இந்த அமைச்சுப் பதவியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தாம் விலகுவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாலைதீவில் தீவொன்றை அமைப்பதற்காக, கிழக்கு மாகாணத்திலிருந்து மணல் திரட்டப்பட்டு, வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுமத்தியிருந்த நிலையில் அவர் இந்த சவாலினை விடுத்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

#சாணக்கியன் #மஹிந்தஅமரவீர #சவால்

Last modified on Wednesday, 08 September 2021 10:24