Print this page

G20 மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் பிரதமர்!

September 13, 2021

G20 நாடுகளின் சர்வமத மாநாட்டிற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்றிரவு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

G20 சர்வமத மாநாடானது பொருளாதார மாதிரி, சுற்றாடல், பெண்கள், பிள்ளைகள், தொழில், மனிதாபிமான உதவி, சுகாதாரம், கல்வி, மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம், பூகோள பாதுகாப்பு, ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்குகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவே ஆரம்பிக்கப்பட்டது.

இந்த மாநாடு முதன்முறையாக 2014 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றதுடன், இம்முறை இத்தாலியின் Bologna பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்றது.

இம்முறை G20 சர்வமத மாநாடானது நோய்கள் குணமடைவதற்கான தருணம், கலாசாரங்களுக்கு இடையில் ஒற்றுமை, மதங்களுக்கு இடையில் புரிந்துணர்வு எனும் தொனிப்பொருளை மையமாக கொண்டு நடைபெறுகின்றது.

வறுமை மற்றும் அறியாமை மேலாங்கிய இடத்தில் அடிப்படைவாத துன்புறுத்தல்கள் மிக இலகுவாக வேரூன்றும் என பரிசுத்த பாப்பரசர் இந்த மாநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்தையும் விட கல்விக்கு முக்கியத்துவமளிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் பரிசுத்த பாப்பரசர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று இத்தாலியின் Bologna பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகும் மாநாட்டின் பிரதான உரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிகழ்த்துகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.