Print this page

“பதவியையும் தூக்கி எறிய தயார்”


“தமிழ் மக்களுக்காக எனது பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வரத் தயாராகவே இருக்கின்றேன்.” என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “தமிழ் மக்களின் கலை, கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டு இருப்பைத் தக்க வைப்பதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் கூட்டிணைந்து செயற்பட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் துர்க்காதே மணி மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் விருந்தினராகக் கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.