Print this page

காத்தான்குடியில் பிடிபட்ட இரகசிய மோசடி

September 16, 2021

மட்டக்களப்பு காத்தான்குடியில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பால் மா நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கிழக்கு மாகாண உதவி இயக்குனர் R.F. அன்வர் சதாத் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான பால் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இவ்வாறு பரிமுதல் செய்யப்பட்ட பால் மாவை அதே இடத்தில் பொதுமக்களுக்கு விற்க நடவடிக்கை எடுத்தனர்.

காத்தான்குடி பொதுச் சந்தையில் உள்ள சில்லரை கடை மற்றும் புதிய காத்தான்குடி பண்ணை சாலையிலுள்ள சில்லரை கடையில் நடத்தப்பட்ட சோதனையின் போது பால் மா பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் படி வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பால் மா மறைத்து வைக்கப்பட்டிருந்தது என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கிழக்கு மாகாண உதவி இயக்குனர் R,F. அன்வர் சதாத் தெரிவித்தார்.