Print this page

லொகான் ரத்வத்தவால் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட தமிழ் அரசியல் கைதி

September 17, 2021

அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்றதாக தெரிவிக்கப்படும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் மிரட்டப்பட்ட தமிழ்க் கைதியின் விபரம் வெளியாகியுள்ளது. 


யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் என்ற 33 வயது கைதியே இவ்வாறு துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவர் கடந்த 2009ஆம் ஆண்டில் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது