Print this page

அமெரிக்கா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

September 19, 2021

ஐ.நா பொதுச் சபையில் பங்கேற்க இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவின் நியூயார்க் நகரிற்கு சென்றுள்ளார்.

செப்டம்பர் 22 அன்று நடைபெறவிருக்கும் ஐ.நா பொதுச் சபையில் எனது உரையில் இலங்கையின் கதையைப் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன், அத்துடன் பல நாடுகளின் தலைவர்களுடன் பயனுள்ள இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவேன். என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.