Print this page

இலங்கையின் அறிக்கை இன்று

இலங்கை அரசாங்கத்தின், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயங்கள் தொடர்பான அறிக்கை இன்றைய தினம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

முன்னதாக, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு ஒன்று நேற்று ஜெனீவா சென்றுள்ள நிலையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் பிரதி மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே ஆகியோரும் ஜெனீவா சென்றுள்ள குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாட்டுக்கு அரசாங்கத்தின் பதில் நிலைப்பாடு மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கையை இன்றையதினம், மாநாட்டில் முன்வைக்கும்.

Last modified on Wednesday, 11 September 2019 01:47