Print this page

தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட பரபரப்பு !

September 22, 2021

நேற்று நடைப்பெற்ற தடுப்பூசி திட்டம் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டது. இதுவரை சுமார் 2000 பேருக்கு ஆனமடுவ கண்ணங்கரா மாதிரி பாடசாலையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி பெற்ற பின்னர் 20 நிமிடங்களுக்கு தடுப்பூசி மையத்தில் தங்கியிருந்த பல இளைஞர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.

ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபே ரத்ன அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க சுகாதாரத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகக் தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து முதலுதவி அளித்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் உறவினர்களுடன் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.