Print this page

இலங்கையில் ஊரடங்கை தளர்த்த தயாராகும் விசேட சுகாதார வழிகாட்டி

September 24, 2021

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் ஏற்பாட்டாளர் நிலந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.