Print this page

ஊரடங்கு தொடர்பில் வெளிவந்த உள்ளக தகவல்

September 26, 2021

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இரவு நேரங்களில் 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை, ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையும் அமுலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான சுகாதார விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என அரச தரப்பை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.