Print this page

கைக்குண்டுடன் திருகோணமலையில் நபரொருவர் கைது

September 27, 2021

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேவநகர், நகர் பிரதேசத்தில் கைக்குண்டுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உப்புவெளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகல்களுக்கமைய சந்தேகநபரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தேவநகர் பிரதேசத்தை சேர்ந்த பாபு என்றழைக்கப்படும் குமார் அந்தோணி பிரான்சிஸ் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர் வடக்கில் ஆவா கும்பலை போன்ற குட்டிப்புலி எனும் ஒரு கும்பலை உருவாக்கி உள்ளூர் மக்களை மிரட்டிய பல்வேறு குற்றங்களை செய்து வருகின்றவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் உப்புவேலி பொலிஸார் கூறியுள்ளனர்.