Print this page

இலங்கையை தளர்த்துவதில் குழப்பத்தில் உள்ள அரசாங்கம்

September 29, 2021

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் குழப்ப நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்து 6 வாரங்களாக முடக்கப்பட்டுள்ள நாட்டை எதிர்வரும் முதலாம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் சில தினங்களுக்கு இது குறித்த இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுமாயின் அதன் பின்னர் அரச நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவையை பராமரித்துச் செல்லும் முறையை தயாரிப்பதற்காக கொவிட் -19 செயலணியினால் குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.