Print this page

இலங்கை மக்களுக்கு ஏற்படப்போகும் மற்றுமொரு நெருக்கடி!

September 29, 2021

கோதுமை மா பற்றாக்குறை காரணமாக அதன் ஊடாக தயாரிக்கப்படும் உணவுப்பண்டங்களின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலினால் சில கம்பனிகள் மாவை பதுக்கி வைத்துள்ளதாக சங்கம் மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் தலையீடு இன்றி விலை அதிகரிப்புக்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவம் தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தையில் தற்போது 87 ரூபாவுக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுகின்றது. சில இடங்களில் 107 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் சில பகுதிகளில் உள்ள பேக்கரிகளின் உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Last modified on Wednesday, 29 September 2021 10:15