Print this page

ATM இயந்திரத்தின் உலோக தகட்டை வெட்டி அகற்றி பணம் கொள்ளை!

September 29, 2021

பொலன்னறுவை மாவட்டம் மின்னேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல் பொருள் அங்காடியை ஒட்டிய அரச வங்கி ஒன்றின் தன்னியக்க பணப் பரிமாற்று இயந்திரத்தின் பணப் பெட்டகத்தின் உலோக பகுதி வெட்டி அகற்றப்பட்டு பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்னேரியா  பொலிஸாருக்கு ஹிங்குரங்கொடை அரச வங்கியின் முகாமையாளர் செய்த முறைப்பாடின் படி விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.