Print this page

கொரோனா தொற்றை டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக ஒழித்து விட முடியும்

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்களை மேலும் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதியின் பின்னர் கட்டுப்பாடுகளை மேலும் நீக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்

மக்கள் சுகாதார சட்டங்களுக்கமைய செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் சுகாதார சட்டங்களின் படி சரியான முறையில் செயற்பட்டால் நாட்டின் கொரோனா தொற்று நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக ஒழித்து விட முடியும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Last modified on Sunday, 03 October 2021 04:38