Print this page

பாடசாலைகளை மீள திறப்பதுக் குறித்து வெளியான தகவல்

கொரோனா காரணமாக நாடாளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் 3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இருநூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் 100 மாணவர்களை விடக் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எல்லா வகுப்புகளையும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அளவுகோல்களின் கீழ் குறித்த பாடசலைகள் ஆரம்ப்பிக்கப்படவுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று , கல்வி அமைச்சருக்கும் மாகாண சபை ஆளுநர்களுக்கு இடையில் இடம்பெற்றதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த பாடசாலைகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது தொடர்பாகவும், இந்த கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Last modified on Tuesday, 05 October 2021 05:47