Print this page

களுத்துறை வைத்தியசாலையில் புதிய சாதனை!

உலகின் புதிய தொழில்நுட்ப இயந்திரத்தின் உதவியுடன் இலங்கையில் முதல் முறையாக அபூர்வமான சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட வைத்தியசாலையிலேயே வித்தியாசமான முறையிலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நோயாளியின் சிறுநீரகத்தில் பரவியிருந்த 5 சென்றி மீற்றர் அளவிலான கல் மற்றும் சில சிறிய கற்களே இவ்வாறு புதிய முறையிலான சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன. 

முதல் முறையாக நோயாளியை மயக்கமடையச் செய்யாது சிறுநீரகத்தில் பரவியிருந்த கல்லை அகற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Last modified on Wednesday, 06 October 2021 06:46