Print this page

இலங்கையை வந்தடைந்தது உலகின் மிகப்பெரிய அசையும் சொத்து

உலகின் மிகப்பெரிய அசையும் சொத்தான EVER GREEN − EVER ACE கொள்கலன் கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.


400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் உள்ள இந்த மிதக்கும் தீவு 23,992 கொள்கலன்களை சுமந்துகொண்டு நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சுயெஸ் கால்வாயூடாக வந்து கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது.


உலகின் 24 துறைமுகங்கள் மட்டுமே இந்தக் கப்பலை கையாள முடியும். அதில் தெற்காசிய வலயத்தில் கொழும்பு துறைமுகத்தில் மட்டுமே இந்தளவு பிரமாண்டமான கப்பலை அனுமதிக்கும் ஆழமும் கொள்ளளவும் உள்ளது.


இந்த கப்பல் நேற்று (5) இலங்கைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட போதும், இன்று காலையே நாட்டுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Last modified on Wednesday, 06 October 2021 07:01