Print this page

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 115 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 115 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 80,475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.