Print this page

மீண்டும் ஆரம்பித்த கொழும்பு யாழ்பாணத்திற்கிடையிலான விமான சேவை

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நவம்பர் மாத நடுப்பகுதியில் விமானங்கள் மீண்டும் சேவையில் ஈடுபடும் என்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.