Print this page

ஆனையிறவில் இராட்சத முதலையால் பீதியில் மக்கள்

ஆனையிறவு - A9 வீதியில் உயிரிழந்த நிலையில் இராட்சத முதலை ஒன்று காணப்படுகின்றது.

குறித்த முதலை இரை தேடி இரவில் வீதிக்கு வந்த போது வாகனங்கள் இதன்மீது ஏறியிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் முதலை அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதனால் கிராமவாசிகள் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, உரிய தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், முதலையின் உடலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

Last modified on Tuesday, 12 October 2021 05:56