Print this page

வௌிநாடு செல்ல அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

எனினும், மேல் நீதிமன்றத்தால் குறித்த சந்தேகநபர்களுக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தால் இந்த உத்தரவு அதற்கு தடையாகாது என்றும் நீதவான் அறிவித்துள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி பிரிவினர், பிரதிவாதிகள் வௌிநாடு செல்வதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடபோவதில்லை என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கடந்த அரசாங்க காலத்தில் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்ததாக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ய