Print this page

அதிகரிக்கும் பாடசாலை சேவை கட்டணம்

பாடசாலை சேவைக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வாகன உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Sunday, 17 October 2021 06:05